அது ஒரு மாலைப் பொழுது. சென்னை மாநகரத்தின் வெப்பம் அப்போதும் சன்னமாய் கசிந்து கொண்டு தான் இருந்தது. அலுவல்கள் முடிந்து அப்போது தான் ஓய்வெடுக்க வந்திருந்தேன். நண்பர்களுடன் தான் தங்கியிருந்தேன். இந்த தொடக்க வேளையில் நானும் ஒரு சாமான்ய சென்னை வாசி. இப்போது போல அப்போதும் தத்துவ விசாரணையில் லயித்து இருப்பேன். வாழ்க்கையின் உண்மையான அர்த்தங்களுக்கு எனக்கு விடைகள் அதிகம் தேடி தந்த சென்னை வாசம். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்று உருவாக்கப்பட்ட பட்டணத்து வாசம். எனது துறைக்கு தேவை பட்டது இந்த வாசம். சுவாசித்து கொண்டிருந்தேன்.
நகர வாழ்க்கையில் இருந்த முழுமையான அனுபவம் எனக்கு போதவில்லை. அன்று நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் இந்த கலந்துரையாடல்.
அவர் : "என்ன நண்பரே, வாழ்க்கை எப்படி போய் கொண்டிருக்கிறது?"
ஏ.வி.ஆர் : பொய் சொல்ல பிடிக்காமல் ஆனாலும் வாழ்க்கைக்கே உரிய தரத்துடன் "வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். எப்படி என்ற ஒரு தேடலுடன்"