அது ஒரு மாலைப் பொழுது. சென்னை மாநகரத்தின் வெப்பம் அப்போதும் சன்னமாய் கசிந்து கொண்டு தான் இருந்தது. அலுவல்கள் முடிந்து அப்போது தான் ஓய்வெடுக்க வந்திருந்தேன். நண்பர்களுடன் தான் தங்கியிருந்தேன். இந்த தொடக்க வேளையில் நானும் ஒரு சாமான்ய சென்னை வாசி. இப்போது போல அப்போதும் தத்துவ விசாரணையில் லயித்து இருப்பேன். வாழ்க்கையின் உண்மையான அர்த்தங்களுக்கு எனக்கு விடைகள் அதிகம் தேடி தந்த சென்னை வாசம். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்று உருவாக்கப்பட்ட பட்டணத்து வாசம். எனது துறைக்கு தேவை பட்டது இந்த வாசம். சுவாசித்து கொண்டிருந்தேன்.
நகர வாழ்க்கையில் இருந்த முழுமையான அனுபவம் எனக்கு போதவில்லை. அன்று நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் இந்த கலந்துரையாடல்.
அவர் : "என்ன நண்பரே, வாழ்க்கை எப்படி போய் கொண்டிருக்கிறது?"
ஏ.வி.ஆர் : பொய் சொல்ல பிடிக்காமல் ஆனாலும் வாழ்க்கைக்கே உரிய தரத்துடன் "வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். எப்படி என்ற ஒரு தேடலுடன்"
அவர் : நீங்கள் சொல்வது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது. என்ன தேடல் அது?
ஏ.வி.ஆர் : அதை தான் தேடி கொண்டிருக்கிறேன்.
அவர் : நீங்கள் இன்னும் அந்த தத்துவ விளையாட்டை விட வில்லைய? அப்படியே தான் இருக்கிறீர்கள் போலிருக்கிறது?
ஏ.வி.ஆர் : வாழ்க்கையில் தத்துவம் என்பதை நான் பிரித்து பார்த்தது கிடையாது. அன்றும் அதுதான் இன்றும் அதுதான்.
அவர் : அதனால் தான் இப்படியே இருக்கிறீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டாமா?
ஏ.வி.ஆர் : எனது வாழ்க்கையின் முன்னேற்றம் தத்துவங்கள் பெசுவதாலா தடைபட்டு போகிறது என்கிறீர்கள்?
அவர் : நீங்கள் ரொம்ப நல்லவர் நண்பரே. அனால் உலகம் இந்த தத்துவங்களை ஏற்று கொள்ளாது. இன்றைய உலகிற்கு தத்துவத்தை விட செயல்தான் மிக முக்கியம். பொருள் நோக்கி ஓடி கொண்டிருக்கும் உலகம் தத்துவம் பேசி நேரத்தை வீணாக்காது.
ஏ.வி.ஆர் : நீங்கள் கூறுவது உண்மைதான். ஏனென்றால் உலகம் தத்துவத்தையும் வாழ்க்கையையும் பிரித்து போட்டு பார்க்கிறது. நான் அப்படி இல்லை. அது தான் வித்தியாசம்.
அவர்: அது எப்படி தத்துவத்தை வாழ்க்கையோடு பின்னி பிணைக்க முடியும். அதுவும் இன்றைய உலகத்தில். நடைமுறைக்கு சாத்தியம் அல்லாதது அல்லவா?
ஏ.வி.ஆர்: எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள். நீங்கள் வாழ்க்கையின் சூட்சுமத்தை புரிந்து கொள்ள வில்லை என்றே என்னால் சொல்ல முடியும். இன்று விதைத்தால் நாளை முளைக்கும் என்பதே ஒரு தத்துவம் தானே, அப்படி அதை உபயோகபடுத்தி வாழ்கின்ற எவனாவது சலித்து போயி உட்கார்ந்து கொண்டிருக்கிறானா? வாழ்க்கைக்கு நடைமுறைக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்கிறீர்கள், வேண்டாம் என்று நீங்கள் அல்லது இந்த சமுதாயம் நிர்ணயிபவற்றை அறவே தள்ளி விடுகிறீர்கள். அதுதான் சரி என்று என்னோடு வாதிடுகிறீர்கள். கணக்கு பாடத்தில் சென்டம் எடுக்க பிதகோராஸ் தியரம் தேவை பட்டது. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதன் பயன் பாடு என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நண்பரே பாடத்தை மனப்பாடம் செய்யுங்கள் என்று சொல்வதே ஒரு தவறான தத்துவம் தான். என்று நாம் புரிந்து வாழ்ந்திருக்கிறோம்? உண்மை விளக்கம் தத்துவம் என்று நான் சொன்னால் நீங்கள் ஏற்று கொள்ள மாட்டீர்கள். அதுவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னால் கை தட்டி வரவேற்பீர்கள்.
தத்துவம் ஒரு அறிவியல் என்று நான் சொன்னால் உங்களால் மறுக்க முடியுமா? அறிவை தெளிவுபடுத்தும் எந்த ஒரு பாடமும் அறிவியல் தான். தத்துவ விசாரணை வந்ததால் மட்டுமே பல விஞ்ஞானிகள் தங்களுடைய கண்டு பிடிப்புகளை உலகிற்கு தர முடிந்தது. அந்த அறிவியலை வைத்து வாழ தெரிந்த உங்களுக்கு, இந்த அறிவியலை அறிவு தேடலை வைத்து வாழ முடியாது என்பது ஒரு விதண்டா வாதம் மட்டுமே
அவர்: நான் அப்படி சொல்ல வரவில்லை. இன்று யாரும் இந்த உலகத்தில் தத்துவம் பேசி வாழ்வதில்லை என்று பொதுப்படையாக சொன்னேன்.
ஏ.வி.ஆர்.: சரி. ஆனால் அவர்கள் சரியாக வாழ்கிறார்களா என்பதே என் கேள்வி. அப்படி சரியாக வாழ்கிறார்கள் என்றால் இன்று நாம் ஒவ்வொருவரும் துன்பப்பட்டு கொண்டிருக்க மாட்டோம். தத்துவம் வாழ்க்கைக்கு எவளவு தேவை என்பதை உள்ளூர் பஜனை மடத்திலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் சென்று பாருங்கள். அங்கு இதை தான் போதிக்கிறார்கள். என்ன ஒரே ஒரு வித்தியாசம் அவை தத்துவம் என்று சொல்லி போதிக்க படுவதில்லை. வாழ்க்கையின் மார்க்கம் என்று சொல்லி போதிக்கிறார்கள். நான் ஒரு சாமான்யன் என்னால் அப்படி செய்ய முடியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வழி எதுவானாலும், தத்துவம் வாழ்க்கையோடு பிணைக்க படும்போது, நாம் சிறப்பாக வாழ தொடங்குவோம். ஆனால் தற்சமயம் என் தோல்வி அதில்தான் நிற்கிறது. என்ன தெரியுமா. இந்த சிந்தனை என் வரையிலோ அல்லது வெகு சில பேர் வரையிலோ வந்து நின்று விடுகிறது.
செயல்பூர்வ வாழ்க்கை என்று நாம் எதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிறோம். ஆனால் அந்த ஏட்டை வைத்து மட்டுமே அது சுரைக்காய் என்பதை அறிந்தோம் என்பதை மறந்து விட்டோம். எவ்வளவு முக்கியமானது அந்த ஏடு என்பது?
அவர் : அப்போது வாழ்க்கையில் தத்துவம் மிக முக்கியம் என்கிறீர்களா?
ஏ.வி.ஆர். : நாம் ஏற்கனவே தத்துவங்கள் கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறேன். என்ன அவற்றை சரியாக புரிந்து வாழ ஒவ்வொரு மனிதனும் துணியும் பட்சத்தில் உலகில் போர், பகை, அச்சம், துன்பம் என்று எதுவும் இருக்காது.
இது ஒரு தொலை நோக்கு பார்வை தான். ஆனால் என் வரையில் நான் இதை செயல்படுத்த பார்க்கிறேன். ஒரு வேளை நீங்கள் சொல்லும் படி எனக்கு பொருளுடன் கூடிய சொகுசு வாழ்க்கை வந்து விட்டது என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது நீங்களும் கண்டிப்பாக இது போல பேசி கொண்டிருக்காமல் என் வழியை பின்பற்றுவீர்கள்.
அப்போதும் இப்போதும் நான் சொல்கிற, சொல்ல போகிற ஒரு விஷயம் உள்ளதை தேடும் நமது வாழ்க்கைக்கு தத்துவங்களின் துணை அவசியமாகிறது. அறிந்தோ அறியாமலோ நாம் அவையுடன் தான் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.
இது ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் பட்சத்தில். நாம் இன்னும் அவற்றின் துணையை அழைத்துக் கொள்வோம். இந்த புரிதலில் நிச்சயம் சிறப்பான வாழ்க்கை நமக்கும் நம்மூடே சக மனிதக்கும் உண்டாகும்.
என் வரையில் இந்த புரிதலோடு தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வரையில் சிறப்பாகவே..!!

வெற்றி, தோல்வி என்பதே ஒவ்வொரு பார்வையிலும் மாறுபடுகிறது....
ReplyDeleteகல்வி, செல்வம், வீரம், சாதனை என்று அது பல பரிமாணங்கள் கொண்டது.....
இது காலத்திற்கு ஏற்ப மாறுபடும்.....