Sunday, March 18, 2012

தொடங்கும் முன்...புரிதல்

எல்லாம் தொலைந்து விடும்
என்ன வாழ்க்கை இது?

எத்தனை காலம் தான்
இப்படியே எண்ணி கொண்டிருப்பாய்?

யாரை நம்பிக் கொண்டிருக்கிறாய்?
எதற்கு இந்த ஏமாற்றம்?
எதற்கு இந்த வெறுப்பு?

மனிதர்கள் விட்டுத் தான் செல்வார்கள்
விட்டில் பூச்சியாய் ஆனது கூட உனக்கு தெரியாது


எங்கே விழுந்தோம்
எதற்கு எழுந்தோம்
என்பது கூட உனக்கு புரியாது


நடப்பவை நடந்து கொண்டுதான்
இருக்கும் - நாடகம் என்றா
சொல்ல போகிறாய்?

என்றால் உனது பாத்திரம்
உனக்கு புரிந்து தான்
நடித்து கொண்டிருக்கிறாயா?


நடனம் தெரியாது வசனம் புரியாது
ஆட்டுவிப்பவன் இருக்கிறான்
என்றா வாதாடுகிறாய்?
என்றால்
ஆடத்தெரியாதது யாருடைய குற்றம்?

இருப்பதை புரிந்து கொள்ளாமல்
அடுத்ததை குறை சொல்கிறாய்


இருட்டிலே விட்டவற்றை
அங்கேயே தான் தேட வேண்டும்
வெளிச்சத்தின் துணை மட்டும்
கண்டிப்பாக வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.

ஒவ்வொரு அசைவும்
ஒவ்வொரு இசைவும்
அந்த ஒளிக் கீற்றின் காரணம்
அது புரிகிறதா உனக்கு?

தொலைந்தது எதுவென்றாலும் அதுவே
கிடைக்க வேண்டும் என்பது தானே
மனதின் தேடல்?

அந்த புரிதல் எப்போது
நடக்க போகிறது உனக்கு?

                                       

                                                                                   ஏ.வி.ஆர்.


No comments:

Post a Comment