பிறந்து விடுகிறோம். ஏன் பிறந்தோம், எப்படி பிறந்தோம், எதற்காக பிறந்தோம் என்று கேள்விகள் சில நேரத்தில் மனதை நைய புடைப்பதுண்டு. பதில்கள் இல்லாத கேள்விகள். இல்லை, பதில்கள் தெரியாத கேள்விகள் அதுதான் சரியாக இருக்கும். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் ஒன்றின் இடையூறு மட்டும் நிதர்சனம். நமது மன சாட்சி. அதன் கேள்விகள். அதில் முயன்று பதில் கண்டுபிடித்து வைத்திருக்கும் பட்சத்தில் என் மூலமாக அவர்களின் தேடல்களுக்கு விடை தேடியவர் பலர். அவர்களையும் தேட வைத்தது அந்த மனம்தான். மனம் ஆத்மாவா இல்லை ஆத்மாதான் மனமா? இதுவும் என் முன்னால் வைக்க பட்ட கேள்விதான். எல்லோரும் ஒரு தேடலுக்காகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். தேடலோடு தான் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
மனதின் நிலைபாட்டை சரி செய்து கொள்ள கேள்விகள் பிறக்கிறது. அந்த தேடலின் சாராம்சம் அது தான். எதை நோக்கி இந்த கேள்விகள், இந்த தேடல்? மீண்டும் முதல் வரிகளை அசை போட்டு பாருங்கள். சில சமயம் கேள்விகளிலேயே பதில் அடங்கி விடுவதுண்டு. கேள்விகள் பிறந்த மனதிலேயே பதில்கள் இருக்காது என்று நான் சொன்னால், நான் மிக பெரிய முட்டாள். ஆத்மா அமைதியான நிலையில் மனதில் லயித்து போய் விடுகிறது ஆலயம் ஆகிறது. அது அங்கிருந்து தான் எடுக்க படுகின்றது. பதில்கள் அங்கிருந்து தான் கிடைக்கின்றது. ஆத்ம விசாரணை அந்த உண்மையை நோக்கி உள்ள ஒரு பயணம்.
என் மனம் போலவே பலருடைய மனதிலும் தோன்றிய அந்த பயணத்தின் தொடக்கம். கேள்விகள் கேட்கபடுவதால் பதில் கிடைக்கிறது, பதில் கிடைப்பதால் மனம் தெளிவடைகிறது. இதோ இவை என் மனம் அந்த கேள்விகளுக்கு கண்டு பிடித்து வைத்திருக்கும் பதில்கள். திண்ணை மீது, டீக்கடை பெஞ்ச் மீது, சினிமா தியேட்டர் இருக்கையின் மீது, குளிநீர் குவளையை உச்சந்தலையில் வைக்கும் பொது என்று இந்த கேள்விகளுக்கு நான் விடை தேடாத சமயம் இல்லை, இடம் இல்லை. பதில்கள் சரியானவையா என்பதை இந்த பிரபஞ்சம் தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அது அங்கிருந்தே எடுக்கப்பட்டது.
ஒவ்வொரு விசாரணையின் பதிலையும் 5 ருபாய்க்கு புத்தகம் போட்டு விற்றிருக்கலாம் தான். 5 ரூபாய் என்பதை விட இலவசத்துக்கு மதிப்பு எப்போதும் உண்டு, அதுதானே உண்மை. இலவசமாக கிடைத்த ஒன்றை இலவசமாகவே வலை நண்பர்களுக்கு தருகிறேன். பிழைகள் இருந்தால் பிழைக்கு தகுந்தாற்போல் பொற்காசுகளை குறைத்து கொள்ளவும்.
ஏ.வி.ஆர்.

No comments:
Post a Comment